சோவியத் வீழ்ச்சிக்குப்பின் ஐரோப்பிய முற்போக்கு இடதுசாரிகள், Chennai: Thamizh Books, 2016 (64 pages).

BUY THE BOOK

பெருமளவுக்கு வளர்ச்சியடைந்த முதலாளித்துவ  சமூகங்களாகவும், நீண்ட இடதுசாரி இயக்கப் பாரம்பரியங்களைக் கொண்டதாகவும் உள்ளவை ஐரோப்பிய நாடுகள். அங்கு இடதுசாரிகள் நடத்தும் போராட்டங்கள் பல. அவை, இந்தியா போன்ற முதலாளித்துவம் மிக வேகமாகவும் மிகவும் பரவலாகவும்  எல்லா அரங்கங்களிலும் காலூன்றி வரும் நாடுகளின் இடதுசாரிகள் ஊன்றிக் கவனிக்க வேண்டியவை.  அத்தோடு சர்வதேச அரங்கத்தில் வேகமாக மாறிவரும் அரசியல் பொருளாதாரச் சமன்பாடுகளைப் புரிந்து கொள்வதும் அவசியமாயுள்ளது. சர்வதேச அரசியல், பொருளாதாரம், பண்பாடு என சகல துறைகளிலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாய் விளங்கக்கூடிய ஐரோப்பாவின் சமகால நிலையை அறிந்து கொள்வது இன்றியமையாததாக உள்ளது.
இந்தத் தேவையை ஈடுசெய்வதற்கு மார்செல்லோ முஸ்டோவின் இச்சிறுநூல் மிகவும் உதவிகரமாக இருக்கும் என நம்புகின்றோம்.

...