அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனப் பகுப்பாய்வின்” முக்கியத்துவத்தை கார்ல் மார்க்ஸுக்கு முன்பே புறிந்து கொண்டிருந்தவர் பிரெடெரிக் எங்கெல்ஸ். அவர்கள் இருவரும் முதல் முறையாகச் சந்திக்கும் தறுவாயில், எங்கெல்ஸ் அரசியல் பொருளாதாரம் பற்றி மார்க்ஸைவிட அதிகமான கட்டுரைகளை வெளியிட்டிருநீதார். ஆனால் அவருடைய நண்பர்தான் இத்துறையில் உலகப் புகழ்பெற்றவராக வருவார் என்று அன்று யாருக்குத் தெரிந்திருக்கும்? 200 ஆண்டுகளுக்கு முன், 1820 டிசம்பர் 288இல் ஜெர்மனியின் பார்மென் நகரில் (அது இப்போது வுப்பெர்டால் நகரின் புறநகராக உள்ளது) பிறந்த அவர் எதிர்காலத்தில் சிறப்பாக வரக்கூடிய இளைஞராக இருந்தார். ஜவுளித் தொழிலதிபராக இருந்த அவரது தந்ைத தன் மகனுக்குப் பல்கலைக்கழகப் படிப்பை மேற்கொள்ளும் வாய்ப்பை மறுத்து, தன் சொந்தத் தொழில் நிறுவனத்தில் அவரை ஈடுபடுத்தினார். ஆகவே, பல்வேறு துறைகளில் அறிவைப் பெறுவதில் தணியாத வேட்கை கொண்டிருந்த அவர் சுயகல்வியில் ஈடுபட்டார்.
பழமைவாத, வலுவான மத நம்பிக்கை கொண்டிருந்த தன் குடும்பத்தினருடன் மோதலைத் தவிர்ப்பதற்காக புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதிவந்தார். நாத்திகராக ஆன எங்கெல்ஸ், அவரது 22ஆம் வயதில், மான்செஸ்டர் நகரில் அவரது தந்தைக்குச் சொந்தமான “எர்மென் அண்ட் எங்கெல்ஸ்” நூற்பாலையில் வேலை செய்வதற்காக அனுப்பப்பட்டார். இங்கிலாந்தில் அவர் கழித்த இரண்டாண்டுகள் அவரது அரசியல் நம்பிக்கைகள் முதிர்ச்சியடைவதில் தீர்மானகரமானவையாக இருந்தன. அப்போதுதான் அவர், பாட்டாளி வர்க்கத்தின் மீதான முதலாளியத்தின் சுரண்டல், தனிச்சொத்து, தனிநபர்களுக்கிடையிலான போட்டி ஆகியவற்றின் விளைவுகளை நேரடியாக அவதானித்தார்.
Also available in:
எங்கெல்ஸ் 200: பங்களிப்புகளும் வரம்புகளூம் 7
Marcello
Musto