பாரிஸ் கம்யூன்

150 ஆண்டுகள்
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
2021
24 pages

சர்வதேச உணர்வுக்கு உலகின்‌ முதல்‌ எடுத்துக்காட்டாக இருந்தது 1871இல்‌ சில வாரங்களே நீடித்திருந்த பாரிஸ்‌ கம்யூனாகும்‌. அதன்‌ 150ஆம்‌ ஆண்டு நிறைவையொட்டி மார்க்ஸிய அறிஞரும்‌ ஆய்வாளருமான மார்செல்லோ முஸ்ட்டோவின்‌ விருப்பத்திற்கேற்ப அவர்‌ எழுதிய சிறு கட்டுரையை தமிழாக்கம்‌ செய்ததுடன்‌, தேவையான அடிக்குறிப்பு களையும்‌ எழுதியுள்ளேன்‌.

Also available in:

Endorsements

«புரட்சியை நடத்தும் பொறுப்பைப் பாரிஸ் கம்யூன் தன் சொந்தக் கைகளில் எடுத்துக் கொண்டபோது; சாமானிய உழைக்கும் மனிதர்கள் தங்களுக்கு “இயற்கையிலேயே மேலானவர்கள்” என்று சொல்லப்பட்டவர்களின் அரசாங்க சிறப்புரிமைகளை முதல் முறையாக மீறத் துணிந்தபோது, முன்னுவமை இல்லாத கடினமான சூழ்நிலைமைகளில், ஒரு பெருநகரப் பள்ளிக்கூட நிர்வாகிகளின் செயலாளருக்குக் குறைந்தபட்சமாகத் தேவைப்படுவதில் ஐந்தில் ஒரு பங்கு ஊதியத்தையே தங்களுக்கான மிக அதிகபட்சமான ஊதியமாகப் பெற்று செயலாற்றியபோது, உழைப்பாளர் குடியரசின் சின்னமான செங்கொடி ஹோட்டல் தெ வில்லில் பறந்து கொண்டிருப்பதைக் கண்டு பழைய உலகம் வெஞ்சின வலிப்புகளால் பதைபதைத்துக் கொண்டிருந்தது. கார்ல் மார்க்ஸ்».
(பிரான்ஸில் உள்நாட்டுப் போர் பற்றி சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தில் மே,1871இல் ஆற்றிய மூன்றாவது உரையிலிருந்து)
«அரசை நடத்துவதற்கான சாதனங்களைத் தேர்ந்தெடுப்பதில் அந்த சாதனங்களில் குறிப்பிட்ட வகுப்புக்கு ஆதரவான ஒரு சார்பான அம்சங்கள் இடம் பெறுவதற்கு அனுமதிக்கக்கூடாது. உண்மையில் இது ஒரு நல்லாட்சிக்கு வலுவான அஸ்திவாரமாகும். ஆனால் இதன் முக்கியத்துவத்தை ஜனநாயகத்தின் தீவிர ஆதரவாளர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்வோர்கூட பொதுவாக உணராதது துரதிஷ்ட வசமானதாகும். கார்ல் மார்க்ஸ்தான் இதனை முதலில் உணர்ந்தவர்; பாரிஸ் கம்யூனின் நிர்வாகத்தில் இதனைக் கணக்கிலெடுத்துக் கொண்டார்…அடிமட்ட வகுப்பினர் முன்வைத்துள்ள இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை டி சே சுட்டிக்காட்டிய, கார்ல் மார்க்ஸ் பரிந்துரைத்த, ரஷ்யாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சங்களையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அடிமட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான் அந்த வகுப்பின் நலன்களைப் பாதுகாக்க முடியும்…».
பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (’திரு.காந்தியும் தீண்டப்படாதோரின் விடுதலையும்’ நூலிலிருந்து)

Table of contents

1. முன்னுரை 3

2. பாரிஸ் கம்யூன்: 150 ஆண்டுகள் 7

Reviews